உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / போதையில் கோதைகளுக்கு தொல்லை 'டாஸ்மாக்' முற்றுகையிட்ட பெண்கள் | TASMAC | Madurai | Police

போதையில் கோதைகளுக்கு தொல்லை 'டாஸ்மாக்' முற்றுகையிட்ட பெண்கள் | TASMAC | Madurai | Police

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நடுப்பட்டி ஊராட்சி சின்னசெம்மேட்டுப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டது. இந்தக்கடை சீமானூத்து ஊராட்சி பெரியசெம்மேட்டுப்பட்டிக்கு ஒதுக்கப்பட்டது. அங்கு இடம் கிடைக்கவில்லை. மேலும் மதுக்கடை திறந்தால் நடப்பதே வேறு என பெண்கள் எச்சரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து இடம் கிடைக்காததால் சின்னசெம்மேட்டுப்பட்டியில் வாடகை கட்டிடத்தில் டாஸ்மாக் திறக்கப்பட்டது. கடையில் சரக்கு வாங்க வருபவர்கள் அங்கேயே குடிக்கின்றனர். விவசாயப் பணிகளுக்காக அந்தப்பகுதியில் தனியாகச் செல்லும் பெண்களிடம் தொல்லை கொடுக்கின்றனர். குடிமகன்கள் சிறுமிகளையும் தரக்குறைவான வார்த்தைகளால் பேசி பாலியல் தொல்லை கொடுப்பதாகக் கூறி பெண்கள் அதிகாரிகளிடம் புகார் கூறினர். நடவடிக்கை இல்லாததால் இன்று பகல் 12 மணிக்கு டாஸ்மாக் கடையை திறக்க விடாமல் பெட்ரோல் கேனுடன் முற்றுகையில் ஈடுபட்டனர். உத்தப்பநாயக்கனூர் போலீஸ் எஸ்.ஐ., மணிமொழி, தி.மு.க., வடக்கு ஒன்றியச் செயலாளர் அஜித்பாண்டி, டாஸ்மாக் அதிகாரிகள் சமரசம் பேசினர். பிப்ரவரி 5 ம் தேதிக்குள் கடை வேறு பகுதிக்கு மாற்றப்படும். அதுவரையில் டாஸ்மாக் கடையுள்ள பகுதியில் போலீசார் பாதுகாவலுக்கு இருப்பார்கள் என உறுதியளித்தனர். தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். போராட்டத்தின் காரணமாக அரை மணிநேரம் தாமதமாக டாஸ்மாக் திறக்கப்பட்டது. மதுக்கடை திறக்கப்பட்டதால் குஷியான குடிமகன்கள் ஈக்கள் மொய்ப்பது போல் மதுக்கடையை மொய்த்து கை நிறைய பணம் செலவு செய்து பை நிறைய மது பாட்டல்களை அள்ளி போட்டு நடையை கட்டினர்.

ஜன 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி