உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / பூங்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் | Temple Festival | Melur | Madurai

பூங்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் | Temple Festival | Melur | Madurai

மதுரை மாவட்டம் மேலூர் சிவன்கோயில் அருகே பழமையான திரௌபதியம்மன் கோயில் உள்ளது. இதன் வைகாசி மாத பூங்குழி திருவிழா கடந்த மாதம் 17 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி கடந்த 15 நாட்களுக்கு மேலாக காப்பு கட்டி விரதம் மேற்கொண்ட பக்தர்கள் பெரியகடை வீதியில் உள்ள பூங்குழித்திடலில் கோவிந்தா கோஷத்துடன் பூங்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பூக்குழி இறங்கிய போது கால் தவறி விழுந்த மூன்று பக்தர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். முன்னதாக திரௌபதியம்மன், தர்மராஜா சமேதராக எழுந்தருளி திருவீதி உலா எழுந்தருளினர். விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூங்குழி உற்சவத்தை கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஜூன் 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை