/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Temple kumbabhishekam | Vadamadurai
திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Temple kumbabhishekam | Vadamadurai
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே புத்துாரில் ஸ்ரீ முடிமலை ஆண்டி, பெரியக்காண்டியம்மன், கருப்பசாமி கோயில்கள் உள்ளன. இங்கு திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் மகா கணபதி பூஜையுடன் துவங்கியது. யாக பூஜைகள் முடிந்து கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. தாடிக்கொம்பு அகரம் முத்தாலம்மன் கோயில் தலைமை அர்ச்சகர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் கும்பாஷேகத்தை நடத்தினர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
செப் 08, 2024