உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / வாக்காளர்கள் பெயர் பட்டியலில் திமுகவினர் திட்டமிட்டு பெயர்களை நீக்கியதாக குற்றச்சாட்டு | 272 Voters

வாக்காளர்கள் பெயர் பட்டியலில் திமுகவினர் திட்டமிட்டு பெயர்களை நீக்கியதாக குற்றச்சாட்டு | 272 Voters

வாக்காளர்கள் பெயர் பட்டியலில் திமுகவினர் திட்டமிட்டு பெயர்களை நீக்கியதாக குற்றச்சாட்டு | 272 Voters Delising | Thenkasi தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே மேல கடையநல்லூர் 26 மற்றும் 27 வது வார்டு பகுதியில் 242 ஓட்டுச்சாவடி மையத்தில் கடந்த முறை ஓட்டுளித்தவர்களில் 272 வாக்காளர்களின் பெயர் நீக்கம் செய்யப்பட்டது. ஓட்டர் ஐடியை அதிகாரிகளிடம் காட்டி ஓட்டளிக்க அனுமதிக்கும்படி பாதிக்கப்பட்டோர் கேட்டனர். எனினும் வாக்காளர் பெயர் பட்டியலில் பெயர் இல்லாததால் ஓட்டுப்போட முடியாது என அதிகாரிகள் கைவிரித்தனர். எனினும் அதற்கான காரணத்தை அதிகாரிகளால் சொல்ல முடியாமல் திணறினர். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அனைவரும் ஓட்டு போட்டனர். தற்போது எவ்வித அறிவிப்பும் இல்லாமல் 272 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். வாக்குரிமையை நீக்க வேண்டும் என்றால் முன்னதாகவே வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் வழங்கி விளக்கம் கேட்க வேண்டும். அதுபோன்ற நடைமுறையை பின்பற்றவில்லை. மூன்று மாதத்திற்கு முன்னதாகவே வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என பரிசோதனை செய்திருக்க வேண்டும் என வாக்காளர்களிடம் அதிகாரிகள் கூறினர். தாலுகா அலுவலகத்தில் இருந்து பெயர் நீக்கப்பட்டாலும் ஓட்டர் ஐடியை கொண்டு சென்றால் அங்குள்ள படிவத்தில் பெயரை குறிப்பிட்டு ஓட்டுப்போடலாம் என நம்பி சென்ற வாக்களர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதுதொடர்பாக கலெக்டர் மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியோருக்கு மனு அளிக்க இருப்பதாக பாதிக்கப்பட்ட வாக்காளர்கள் கூறினர். ஓட்டுப்போட அனுமதி மறுத்த அதிகாரிகளை கண்டித்து 242 மற்றும் 243 ஆகிய ஓட்டுச்சாவடிகளை வாக்காளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஏப் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி