பெண் பக்தர்கள் பரவசம் | Madurai | Thiruvilakku Pooja
மதுரையில் திருப்பாவை திருவெம்பாவை இசைப்பள்ளி சார்பில் 71வது ஆண்டு மார்கழி பாவை விழா டிசம்பர் 16ல் துவங்கியது. விழாவையொட்டி டிசம்பர் 15ம் தேதி காலை 6 மணிக்கு அம்மன் சன்னதி சிருங்கேரி சங்கர மடத்தில் மகா கணபதி ஹோமம், ருத்ரம் நவக்கிரஹ ஹோமம், சுமங்கலி பூஜை நடைப்பெற்றது. தொடர்ந்து டிசம்பர் 16ம் தேதி மாலை உலக நன்மை வேண்டி மதுரை காந்தி மியூசிய வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருப்பாவை திருவெம்பாவை இசைப்பள்ளியின் தலைவர் விசாலாட்சி தலைமை வகித்தார். தொழிலதிபர் நாகரத்தினம் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். பின்னர் பெண்கள் தங்கள் முன் இருந்த திருவிளக்கில் தீபம் விளக்கேற்றி வழிபாட்டை தொடங்கினர். பக்தர்கள் அம்மன் பாடல் பாடி பரவசம் அடைந்தனர். திருவிளக்கு பூஜையில் பெண்கள், சிறுமியர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். திருப்பாவை திருவெம்பாவை இசைப்பள்ளி சார்பில் கடந்த 2013 ம் ஆண்டு நடந்த பாவை விழாவில் 15,000 திருவிளக்கு வழிபாடு செய்து கின்னஸ் சாதனை படைத்தனர். விழா ஏற்பாடுகளை திருப்பாவை திருவெம்பாவை இசைப்பள்ளி பாவை விழா குழுவினர் செய்திருந்தனர்.