உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / மதுரை மேலுார் குவாரியால் வாழ்வா? சாவா? போராட்டம் | Villagers demanding the permanent closure of th

மதுரை மேலுார் குவாரியால் வாழ்வா? சாவா? போராட்டம் | Villagers demanding the permanent closure of th

மதுரை மேலுார் குவாரியால் வாழ்வா? சாவா? போராட்டம் | Villagers demanding the permanent closure of the quarry | Kottampatti | Madurai மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியம் சொக்கம்பட்டி அகிலா குட்டு பகுதியில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. குவாரியில் பாறைகளை தகர்க்க வைக்கப்படும் சக்தி வாய்ந்த வெடியால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு, விவசாயம் கேள்விக்குறியாகி வருகிறது. கடினமான பாறைகளை உடைக்க சக்தி வாய்ந்த வெடி மருந்துகள் பயன்படுத்துகின்றனர். பாறைகள் உடையும் போது பல கிலோ மீட்டர் துாரத்துக்கு கற்கள் சிதறி விழுகின்றனர். கொட்டாம்பட்டி சாலையில் செல்பவர்கள் மீதும் கற்கள் விழுகிறது. மேலும் அருகிலுள்ள அய்யனார் கோயில் சிலைகளும் சேதமடைந்துள்ளது. விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு செல்லும் பாதையையும் குவாரி உரிமையாளர் கதவு அமைத்து பூட்டியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கொதிப்படைந்த சொக்கம்பட்டி, வலைச்சேரிபட்டி, தொந்திலிங்கபுரம் கிராம மக்கள் குவாரியை முற்றுகையிட்டு நிரந்தரமாக மூட வலியுறுத்தினர். ஸ்பாட்டுக்கு விரைந்த டி.எஸ்.பி. சிவகுமார், எஸ்.ஐ வேங்கையன் மற்றும் சொக்கம்பட்டி வி.ஏ.ஓ ஆறுமுகம் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். குவாரியை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் தொடரும் என கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

அக் 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை