உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பக்தர்கள் பரிதவிப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பக்தர்கள் பரிதவிப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பக்தர்கள் பரிதவிப்பு / Meenakshi Amman Temple / Tiered Car Parking / ₹42 Crore Waste? மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு முக்கிய சுற்றுலாத்தலங்களில் முதன்மையானது மீனாட்சி அம்மன் கோயில். மீனாட்சி அம்மன், சொக்கர் சுவாமியை தரிசனம் செய்ய உள்நாடு, வெளிநாடு என தினமும் பல்லாயிரக்கணக்கானோர் வருகை தருகின்றனர். விடுமுறை நாட்களில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். திரளான பக்தர்கள் மக்கள் ஒரே நேரத்தில் குவிந்து நீண்ட நேரம் காத்திருந்து சுவாமியை தரிசித்து செல்வது வழக்கம். சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் சிரமமின்றி தங்களது வாகனத்தை நிறுத்துவதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மாநகராட்சி அடுக்கு கார் பார்க்கிங் வசதியை ஏற்படுத்த முடிவு செய்தது. இதற்காக கோயில் அருகே பழைய சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் 2022-ஆம் ஆண்டு 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு அடுக்கு பார்க்கிங் உருவாக்கப்பட்டது. இதில் ஒரே நேரத்தில் 120 கார் மற்றும் 1000 மேற்பட்ட டூவீலர் நிறுத்தலாம். பார்கிங் எதிரே 20-30 வேன்களை நிறுத்த முடியும். கார் கட்டணம் 3 மணி நேரத்திற்கு 40 ரூபாய். ஒரு நாள் கட்டணம் 120 ரூபாய். அதேபோல் வேன் கட்டணம் 100 ரூபாய். ஒரு நாள் கட்டணம் 175 ரூபாய் என வசூலிக்கப்படுகிறது. இந்த பார்க்கிங்கிற்கு சாதாரண நாட்களில் 300 முதல் 400 கார்கள் வந்து செல்கிறது. விடுமுறை நாட்களில் 800 முதல் 1000-மேற்பட்ட வாகனங்கள் வருகை உள்ளது. இங்குள்ள பார்க்கிங்கில் இடமில்லாத பட்சத்தில் மாசி வீதிகளில் வாகனங்களை நிறுத்துவிட்டுச் செல்வதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மதுரை பெரியார் பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 160 கோடி ரூபாய் புனரமைக்கப்பட்டது. அதனருகே ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் இடிக்கப்பட்டு பார்க்கிங் வசதியுடன் புனரமைக்கப்பட்டது. கோவிலைச் சுற்றிப் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வளாகத்தில் பல்லடுக்கு பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டது. அங்கு 371 கார்கள் மற்றும் நான்காயிரத்திற்கு மேற்பட்ட டூவீலர்ளை நிறுத்தலாம். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் மல்டி லெவல் பார்க்கிங் மற்றும் மீனாட்சி அம்மன் மல்டி லெவல் பார்க்கிங் இரண்டையும் ஒரு தனியார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்தது. தற்பொழுது மீனாட்சியம்மன் கோயில் கார் பார்க்கிங் மட்டும் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனம் பலமுறை மாநகராட்சியிடம் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பார்க்கிங்கை திறக்க அனுமதி தரும்படி கோரிக்கை விடுத்ததும் மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் மல்டி லெவல் பார்க்கிங் பயன்பாட்டிற்கு வராததால் குப்பைகள் கொட்டும் இடமாக மாறியது. பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பார்க்கிங் பகுதியில் மது பாட்டில், பிளாஸ்டிக் கழிவுகள் என குப்பைகள் குவிந்து துர்நாற்றம் எடுக்கிது. இங்குள்ள மல்டி லெவல் கார் பார்க்கிங் பகுதியில் கரண்ட் சப்ளை இல்லை. இதன் காரணமாகவும் கார் பார்க்கிங் செயல்பாட்டிற்கு வரவில்லை. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை பார்க்கிங் செய்ய முடியாமல் பரிதவித்து வருகின்றனர். மக்கள் வரிப்பணம் பல கோடி ரூபாய் செலவு செய்தும் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியாமல் மாநகராட்சி நிர்வாகம் மெத்தனமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து மதுரை மாநகராட்சி உதவிப் பொறியாளர் ஆறுமுகம் கூறுகையில் ஸ்மார்ட் சிட்டி பெரியார் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பல்லடுக்கு பார்க்கிங் பகுதிக்கு மின் இணைப்பு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு மாதத்திற்குள் மின் இணைப்பு பணிகள் முடிக்கப்பட்டு ஓரிரு மாதங்களில் பார்க்கிங் செயல்பாட்டிற்கு வந்து விடும் என்றார்.

செப் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ