வணிக வரி அமைச்சர் மூர்த்தி மீண்டும் திட்டவட்டம் | Tungsten mining | Villageres protest | Madurai
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தமிழகத்தின் முதல் பாரம்பரிய பல்லுயிர் தளமாக அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி உள்ளிட்ட சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மலையை வெட்டி டங்ஸ்டன் கனிமம் எடுக்க மத்திய அரசு, வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைக் கண்டித்து முல்லை பெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் மேலூர் பஸ் ஸ்டாண்ட் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதில் 48 கிராம முக்கியஸ்தர்கள் உட்பட ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழர்களின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் விதமாக பல்வேறு வரலாற்று மற்றும் தொல்லியல் சின்னங்கள் உள்ள மதுரை மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட தமிழ் பண்பாட்டு தொல்லியல் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.