பூர்ண சந்திரன் குடும்பத்தினருக்கு வேலூர் இப்ராஹிம் ஆறுதல்
பூர்ண சந்திரன் குடும்பத்தினருக்கு வேலூர் இப்ராஹிம் ஆறுதல் | Thiruparangundram Issue | Vellore Ibrahim Talk obsession about DMK | Madurai திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரத்தில், கடந்த டிசம்பர் 18ம் தேதி முருக பக்தர் பூர்ண சந்திரன் உடலில் தீபம் ஏற்றி உயிர்த்தியாகம் செய்தார். இச்சம்பவம் முருக பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர் . இன்று பாஜக சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலாளர் சையத் இப்ராகிம், பூர்ண சந்திரன் வீட்டிற்கு சென்றார் . பூர்ண சந்திரன் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
டிச 24, 2025