உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மதுரை / வெங்கடேசன் எம்பி, அமைச்சர் மூர்த்தியை சுற்றி வளைத்த விவசாயிகள்| Opposition to Su. Venkatesan MP

வெங்கடேசன் எம்பி, அமைச்சர் மூர்த்தியை சுற்றி வளைத்த விவசாயிகள்| Opposition to Su. Venkatesan MP

வெங்கடேசன் எம்பி, அமைச்சர் மூர்த்தியை சுற்றி வளைத்த விவசாயிகள்| Opposition to Su. Venkatesan MP, Minister Murthy மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது வெள்ளளூர். இதை வெள்ளளூர் நாடு என அழைப்பர். 64 கிராமங்களின் வெள்ளளூர் நாடு தான் தலை கிராமம். வெள்ளளூர் நாடு ஏழைக்காத்தம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் 7 சிறுமிகள் அம்மனாக தேர்வு செய்யப்பட்டு கோயில் வீட்டில் 15 நாட்கள் தங்க வைத்து விழா நடத்துவர். இவ்விழாவை 64 கிராம மக்கள் ஒருங்கிணைந்து பாரம்பரிய முறைப்படி ஆண்டு தோறும் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். கடந்தாண்டு மழை பெய்து வைகை அணை நிரம்பியது. இதையடுத்து மேலுார் பகுதியில் ஒரு போக சாகுபடிக்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடக்கோரி மேலுார் அனைத்து விவசாயிகள் சார்பில் அரசிடம் கோரிக்கை விடுத்தனர். யாரும் கண்டு கொள்ளவில்லை. தண்ணீர் திறக்கக்கோரி கடையடைப்பு, பொதுப்பணித்துறை அலுவலகம் முற்றுகை, நான்கு வழிச்சாலையில் மறியல் என பெரிய அளவில் விவசாயிகள் போராட்டங்களை நடத்தினர். எனினும் வைகை அணை திறக்கப்படவில்லை. இதனால் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, நெல் தண்ணீர் இன்றி கருகியது. விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டது. விவசாயிகளுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கட்சி எம்பி வெங்கடேசன், அமைச்சர் மூர்த்தி குரல் கொடுக்கவில்லை. வெங்கடேசன் எம்பி போராட்டங்களில் பங்கேற்கவில்லை. குறைந்தபட்சம் ஆறுதல் வார்த்தை கூட கூறாத வெங்கடேசன் எம்பி, அமைச்சர் மூர்த்தி மீதும் மேலுார் விவசாயிகள் கடும் கோபத்தில் இருந்தனர். இந்நிலையில் ஓட்டுக்கேட்டு பாஜ வேட்பாளர் பேராசிரியர் சீனிவாசன் வெள்ளளூர் நாடு சென்றார். அவரை வெள்ளளூர் ஊர் முக்கியஸ்தர்கள் வரவேற்றனர். வெள்ளளூர் நாடு பாரம்பரிய முறைப்படி மேல்சட்டை அணியாமல், தலையில் முண்டாசு கட்டி வெற்றிலை தாம்பாலத் தட்டுடன் சீனிவாசன் சென்றார். வெள்ளளூர் நாடு பழக்க வழக்கப்படி தரையில் விழுந்து கும்பிட்டு மண்ணை எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டார். நான் ஐயா மோடி பிரதமராக மீண்டும் வர வேண்டி உங்களிடம் வந்துள்ளேன், என்றார். அவருக்கு வெற்றிலை வழங்கி ஊர் முக்கியஸ்தர்கள் வாழ்த்தி வழியனுப்பினர்.

ஏப் 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !