மதுரை அலங்காநல்லுார் ஓட்டுச்சாவடியில் பரபரப்பு | Voting machine malfunction | Alanganallur | Madurai
மதுரை அலங்காநல்லுார் ஓட்டுச்சாவடியில் பரபரப்பு | Voting machine malfunction | Alanganallur | Madurai மதுரை மாவட்டம் சோழவந்தான் தனித் தொகுதிக்கு உட்பட்டது அலங்காநல்லூர். இங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டது. இங்கு 4 பூத்கள் உள்ள நிலையில் 207 எண் கொண்ட பூத்தில் மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தில் சில ஓட்டுக்கள் பதிவான நிலையில் திடீரென ரிப்பேர் ஆனது. இதனால் பொதுமக்கள் 3 மணி நேரமாக வாக்களிக்க முடியாமல் வரிசையில் காத்துக் கிடந்தனர். மின்னணு வாக்குபதிவு இயந்திரம் Error காண்பித்ததால் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டது. மாற்று இயந்திரம் கொண்டு வரப்பட்டது. அந்த இயந்திரமும் செயல்படாததால் வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள் பூத் கதவை மூடினர். அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியும் வாக்காளர்கள் சமாதானம் ஆகாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 3 மணி நேர தாமதத்தை தொடர்ந்து தற்போது வாக்குப்பதிவு இயந்திரம் சரி செய்யப்பட்டு வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். ஓட்டுச்சாவடி கதவை வாக்காளர்கள் பூட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.