உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மயிலாடுதுறை / திரளான பக்தர்கள் பங்கேற்பு | 9 temple kumbabishekam at mayiladuthurai

திரளான பக்தர்கள் பங்கேற்பு | 9 temple kumbabishekam at mayiladuthurai

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா அசிங்காடு கிராமத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது . இக்கோயிலில் உள்ள அம்பிகையை உள்ளூர் உள்ளூர் மற்றும் வெளி மாவட்ட பக்தர்கள் குலதெய்வமாக ஏற்று வழிபாடு செய்து வருகின்றனர். இதே கிராமத்திலுள்ள விநாயகர் ,முருகன், மகாலிங்க சுவாமி, பிடாரியம்மன், மன்மதசுவாமி, மண்ணடி வீரன், பேச்சியம்மன், நவகிரகங்கள் உள்ளிட்ட 9 தெய்வங்களுக்கு தனித்தனியாக ஒன்பது கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களின் திருப்பணிகள் முடிவு பெற்று 13ஆம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கியது. இன்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியார்கள் கோயில் கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். சுற்றுப்புறகிராமத்தைச் சேர்ந்த மக்கள் விழாவில் திரளாக பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.

செப் 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி