திரளான பக்தர்கள் பங்கேற்பு | Thula utsavam flag hoisting
மயிலாடுதுறையில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் 30 நாட்கள் காவிரியில் துலா உற்சவம் நடைபெறும். கடைசி பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் மயிலாடுதுறையில் உள்ள கோயில்களில் இருந்து உற்சவமூர்த்திகள் புறப்பட்டு காவிரி துலா கட்ட தீர்த்தவாரியில் பங்கேற்கும். இந்த ஆண்டுக்கான துலா கட்ட உற்சவ கொடியேற்று விழா இந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் இன்று நடந்தது. விழாவில் தொடக்கமாக கருட கொடி ஏற்றப்பட்டது இன்று முதல் தினந்தோறும் காவிரியில் தீர்த்தவாரி நடைபெறும். கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நவ 07, 2024