உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மயிலாடுதுறை / 4,000 முடிச்சுகளை நுாலில் குறுக்கும் நெடுக்குமாக கட்டி வரையும் 'நுாலோவியர்' | String Art Portrait

4,000 முடிச்சுகளை நுாலில் குறுக்கும் நெடுக்குமாக கட்டி வரையும் 'நுாலோவியர்' | String Art Portrait

4,000 முடிச்சுகளை நுாலில் குறுக்கும் நெடுக்குமாக கட்டி வரையும் நுாலோவியர் | String Art Portrait | Dharanikumar | Mailadudurai இன்றைய உலகில் படிப்பு மட்டுமல்லாமல் இளைஞர்கள் பலர் கைத்தொழிலையும் கற்றுத் தேர்ந்து வருமானம் ஈட்டி வருகின்றனர். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த கல்லுாரி மாணவரான தரணிகுமார், வயது 21, ஸ்ட்ரிங் ஆர்ட் (String Art) கலையின் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார். ஸ்ட்ரிங் ஆர்ட் என்பது கருப்பு நூலைக் கொண்டு பிளைவுட் பலகையில் 300க்கும் மேற்பட்ட சிறிய ஆணிகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முடிச்சுகளை குறுக்கும் நெடுக்குமாக போட்டோவிற்கு ஏற்ப கட்டி ஓவியம் அமைக்கும் அற்புதப் படைப்பாகும். இந்த வகையான ஓவியங்கள் 30×30 என்ற அளவில் உருவாக்கப்படுகிறது. நூல் இழை அறுந்து விடாமல் மிகவும் சிக்கலான நுட்பமான ஆர்ட் இது எனலாம். இந்த ஆர்ட் உருவாக்க குறைந்தது 3 அல்லது 4 நாட்கள் தேவைப்படும். விலை 2,500 முதல் 3,000 ரூபாய். வாடிக்கையாளர் விரும்பிய போட்டோக்களை கொடுத்தவுடன் கம்பியூட்டர் டிசைன் செய்து அதை ப்ரோகிராம் (Programme) செய்து அதற்கு தகுந்தால் போல் ஆர்ட் வேலையை துவக்குகிறார் தரணிகுமார். மத்திய சட்டக் கல்லூரி சேலத்தில் பிஏ, எல்எல்பி இறுதியாண்டு படிக்கும் தரணிகுமார் கல்லூரி விடுமுறை நாட்களில் ஆர்டர் பெறப்பட்ட நபர்களுக்கு ஸ்ட்ரிங் ஆர்ட் போர்ட்ராய்ட் (String Art Portrait) ஓவியங்களை தத்ரூபமாக தயாரித்து தருகிறார். ஆர்டரின் பேரில் விற்பனை செய்து நல்ல வருமானம் ஈட்டி வருகிறார். ஸ்ட்ரிங் ஆர்ட் மூலம் கிடைக்கும் வருமானத்தை தனது படிப்பு செலவு மற்றும் குடும்ப தேவைக்காக பெற்றோரிடம் கொடுத்து உதவி வருகிறார். ஓய்வு நேரத்தில் ஸ்ட்ரிங் ஆர்ட் உருவாக்கும் தரணிகுமார் கடந்த 2 வருடமாக பல்வேறு நபர்களுக்கு ஆர்டரின் பேரில் ஓவியங்களை கொடுத்து வருகிறார். தஞ்சை மாநகராட்சி மேயர் ராமநாதன் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படத்துடன் கூடிய String Art Portrait செய்து பரிசாக அண்மையில் வழங்கியுள்ளார் ஓவிய கலைஞர் தரணிகுமார். ஸ்ட்ரிங் ஆர்ட் தேவைக்கு 82484 57938ல் ஹலோ சொல்லலாம்

ஆக 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ