உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நாகப்பட்டினம் / 40 அணிகள் பங்கேற்பு |state level kabadi|pondy champion |nagai

40 அணிகள் பங்கேற்பு |state level kabadi|pondy champion |nagai

40 அணிகள் பங்கேற்பு /state level kabadi/pondy champion /nagai நாகை மாவட்டம் நம்பியார் நகரில் ஸீ ஸ்போர்ட்ஸ் (sea sports) கபடி கழகம் சார்பில் 43 ம் ஆண்டு மாநில அளவிலான கபடி போட்டிகள் நடைபெற்றன. போட்டியை மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரன் மற்றும் டிஎஸ்பி ராமச்சந்திர மூர்த்தி துவக்கி வைத்தனர். இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 40 அணிகள் பங்கேற்று விளையாடின. இறுதிப் போட்டியில் புதுச்சேரி மங்கலம் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் நாகை நம்பியார் நகர் ஸீ ஸ்போர்ட்ஸ் கபடி கழகம் அணியும் மோதியது. இதில் புதுச்சேரி மங்கலம் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி சாம்பியன் பட்டம் வென்றது. 30,000 ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. தமிழ்நாடு அமைச்சூர் கபடி கழக நிர்வாகிகள் பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினர்.

மே 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ