உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / குட்டி யானைகளை பராமரிக்கும் பாகன், 5 உதவியாளர்கள் | Baby Elephants care | Theppakadu Camp

குட்டி யானைகளை பராமரிக்கும் பாகன், 5 உதவியாளர்கள் | Baby Elephants care | Theppakadu Camp

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாம் தாயைப் பிரிந்து குட்டி யானைகளை பராமரிப்பதில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. முகாமில் தாயை பிரிந்த குட்டி யானைகள் ரகு மற்றும் பொம்மியை பராமரித்து வந்த பழங்குடி பாகன் தம்பதி பொம்மன் - பெள்ளி மற்றும் யானைகள் இடையேயான பாச உறவை மையமாக வைத்து பெண் இயக்குனர் கார்த்திகி கன்சால் எடுத்த த எலிபென்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவண படம் ஆஸ்கார் விருது பெற்றது. படத்தில் இடம் பெற்ற யானை குட்டிகள் மற்றும் பாகன் தம்பதியை ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி முதுமலைக்கே நேரடியாக வந்து பாராட்டினர். breath: இதற்கிடையே ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி வனப்பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த மார்ச் 5ல் உயிரிழந்த யானையின் இரண்டு மாத பெண் குட்டி யானை மார்ச் 9ம் தேதி தெப்பக்காடு முகாமில் சேர்க்கப்பட்டது. அதேபோல் கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி தாயைப் பிரிந்த நான்கு மாத ஆண் குட்டி யானை ஏப்ரல் 10ம் தேதி தெப்பக்காடு யானைகள் முகாமில் சேர்க்கப்பட்டது. முகாமில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள கராலில் குட்டி யானைகளை தனித்தனியாக வைத்து பராமரித்து வருகின்றனர். இதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாகன், உதவியாளர்கள் 5 பேர் அங்கேயே தங்கி குழந்தையை போல் குட்டி யானைகளை கவனித்து வருகின்றனர்.

மே 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை