உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / மத்திய இணை அமைச்சர் முருகன் பேட்டி | Central Minister Murugan

மத்திய இணை அமைச்சர் முருகன் பேட்டி | Central Minister Murugan

மலைவாழ் பழங்குடியினர் மேம்பாட்டுக்கான பிரதம மந்திரி ஜன்மன் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு இலவச வீடு கட்டும் முதல் கட்ட நிதியை பிரதமர் மோடி துவக்கி வைத்து மலைவாழ் மக்களிடம் காணொளி மூலம் உரையாடினார். இந்நிகழ்ச்சியை நீலகிரி மாவட்டம் கூடலூர் ஸ்ரீமதுரை ஊராட்சி மண்வயல் சமுதாயக் கூடத்தில் பழங்குடி மக்கள் காணொளி மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. பழங்குடியினருடன் மத்திய இணை அமைச்சர் முருகன் நிகழ்ச்சியை பார்த்தார். அதைத் தொடந்து மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்திபிரியதர்ஷினி தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மத்திய இணை அமைச்சர் முருகன் பங்கேற்று 50 பயனாளிகளுக்கு 46 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர். நிகழ்ச்சியில் ஸ்ரீமதுரை ஊராட்சித் தலைவர் சுனில், மருத்துவ சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, கூடலூர் ஆர்.டி.ஒ. முகமது குதிரத்துல்லா, தாசில்தார் ராஜேஸ்வரி, வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஜன 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை