உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / விவசாயிகளுக்கு ₹8 லட்சம் நஷ்டம் | Chayote Crop Damage | Wild Elephant Rampage | Pandalur | Nilgiris

விவசாயிகளுக்கு ₹8 லட்சம் நஷ்டம் | Chayote Crop Damage | Wild Elephant Rampage | Pandalur | Nilgiris

விவசாயிகளுக்கு ₹8 லட்சம் நஷ்டம் | Chayote Crop Damage | Wild Elephant Rampage | Pandalur | Nilgiris நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் மவுடண்டாடன் செட்டி சமுதாய மக்கள் வசித்து வந்தனர். இவர்கள் கடந்த 4- ஆண்டுகளுக்கு முன்பு மாற்றிட திட்டத்தில் முருக்கம்பாடி பகுதியில் குடியமர்த்தப்பட்டனர். செளசெள, நேந்திரன் வாழை, இஞ்சி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து பஞ்சம் பிழைக்கின்றனர். வனமாக காணப்பட்ட நிலத்தை சீரமைத்து, அதில் விவசாயம் மேற்கொண்டு வரும் நிலையில் யானைகளால் விவசாய பயிர்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. முருக்கம்பாடியை சேர்ந்த மோகன் மற்றும் சண்முகம் ஆகியோர் தலா 3 ஏக்கரில் செளசெள விவசாயம் மேற்கொண்டனர். கடந்த மூன்று ஆண்டுகளாக விளைச்சல் துவங்கும் நேரத்தில் ஒற்றை யானை வழக்கமாக வந்து பயிர்களை முழுமையாக காலி செய்து விட்டு செல்வது வழக்கமாகி விட்டது. தற்போது இவர்கள் சோலார் வேலி அமைத்து, அதற்குள் செளசெள விவசாயம் மேற்கொண்டு வந்தனர். கடந்த நான்கு நாட்களாக தொடர்ச்சியாக இங்கு வந்த ஒற்றைக் காட்டு யானை பயிர்களை தின்று அழித்து விட்டது. தோட்டங்களை சுற்றிலும் அகழி அல்லது தொங்கும் சோலார் வேலிகள் அமைத்து, யானைகள் வராமல் தடுக்கவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுத்தினர்.

அக் 12, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை