மறுசுழற்சி பாட்டில்கள் வழங்கும் திட்டம் ரெடி |Ban on Plastic |JCI provides dinking water| Nilgiris
மறுசுழற்சி பாட்டில்கள் வழங்கும் திட்டம் ரெடி | Ban on Plastic | JCI provides dinking water | Nilgiris நீலகிரி மாவட்டத்தில் 18 ஆண்டுகளுக்கு முன்பு பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் எல்லையில் உள்ள சோதனை சாவடி பகுதிகளில் சுற்றுலா பயணிகளிடம் இருந்து பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால் வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் குடிநீருக்காக சிரமப்படுகின்றனர். இதற்கு தீர்வு காணும் விதமாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து குன்னூர் ஜே.சி.ஐ. அமைப்பு சார்பில் மறு சுழற்சி செய்யும் பாட்டில்கள் அறிமுகம் செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகளில் அமையும் குடிநீர் வழங்கும் மையங்களில் மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பட்டியல் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு வழி கொடுத்து பணியில் அமர்த்தப்பட உள்ளனர். இம்மையங்களுக்கு முதல் முறையாக மறு சுழற்சிக்கான குடிநீர் பாட்டில்களை JCI சொந்த நிதியில் வழங்கும். அடுத்தடுத்து குடிநீர் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் முழுவதும் மையங்களில் வேலை பார்ப்போர் மேம்பாட்டிற்காக வழங்கப்படும். நிகழ்ச்சியில் குன்னூர் ஜே.சி.ஐ. தேசிய துணை தலைவர் ஹர்ஷ வர்த்தன ரெட்டி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.