இரண்டு நாளாக சாப்பிடாததால் மயங்கினார் |Nilgiris
நீலகிரி மாவட்டம் பந்தலூரில் மனிதர்களை தாக்கி வந்த சிறுத்தையை பிடிக்க வாலியுறுத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த குழந்தையின் வடமாநில தொழிலாளி பிலான்தேவியும் பங்கேற்றார். பிலான்தேவி 2 நாளாக சாப்பிடாததால் போராட்டத்தின் போது மயங்கி சாய்ந்தார். அங்கிருந்த தலைமை காவலர் திலோர்மணி அவரை ஆசுவாசப்படுத்தி ஆறுதல் கூறினார். பின்னர் தண்ணீர் கொடுத்து உணவை ஊட்டி விட்டார். போராட்ட களத்தில் நடைபெற்ற இச்சம்பவத்தை பார்த்த அனைவரும் பெண் போலீசாரை பாராட்டினர்.
ஜன 08, 2024