அவசர அவசரமாக கடைகளை அடைத்து வீட்டுக்குள் புகுந்த மக்கள் - என்ன நடந்தது ? elephant attack | pandalur
அவசர அவசரமாக கடைகளை அடைத்து வீட்டுக்குள் புகுந்த மக்கள் - என்ன நடந்தது ? elephant attack | pandalur நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பிதர்காடு வனச்சரக அலுவலகம் எதிரே அமைந்து உள்ளது சந்தக்குன்னு கிராமம். இந்தப் பகுதிக்கு தினமும் ஒற்றைக் காட்டு யானை வந்து செல்கிறது. அதே பகுதியை சேர்ந்த 60 வயது விவசாயி ஜோய் என்பவர் நேற்றிரவு 8 மணிக்கு தனது வீட்டிற்கு அருகிலுள்ள காபி தோட்டம் வழியாக நடந்து சென்றார். அப்போது தோட்டத்தில் மறைந்திருந்த ஒற்றைக் காட்டு யானை ஜோயை தாக்கி துாக்கி வீசியது. இதில் படுகாயமடைந்த ஜோயை மீட்டு பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் இறந்தார். காட்டு யானையை வனத்திற்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். யானையை விரட்டக்கோரி பிதர்காடு பஜாரில் கடைகள் அடைக்கப்பட்டன. பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்பதால் உதவி வனப் பாதுகாவலர் அருள்மொழிவர்மன், டிஎஸ்.பி. ஜெயபாலன், தாசில்தார் சிராஜூநிஷா தலைமையில் போலீசார், வனத்துறை, வருவாய்த்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.