உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / நீலகிரியில் விதி மீறல் கட்டிடங்களை இடித்து தள்ள ஐகோர்ட் உத்தரவு

நீலகிரியில் விதி மீறல் கட்டிடங்களை இடித்து தள்ள ஐகோர்ட் உத்தரவு

நீலகிரியில் விதி மீறல் கட்டிடங்களை இடித்து தள்ள ஐகோர்ட் உத்தரவு | Elephant corridor encroachment |High Court Order நீலகிரி மாவட்டம் முதுமலை, மசினகுடியை ஒட்டிய சீகூர் யானை வழித்தடத்தை மறித்து தனியார் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி 2009 ல் வக்கீல் ராஜேந்திரன் என்பவர் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். தொடர்ந்து யானை வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள விடுதிகளையும், பட்டா நிலங்களையும் காலி செய்யுமாறு 2011-ல் ஐகோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர். சுப்ரீம் கோர்ட் உத்தரவை உறுதி செய்தது. சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி 2018ல் யானை வழித்தடத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டது. வழித்தடத்தை மீட்கும் நடவடிக்கையாக சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் 3 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி சீல் வைக்கப்பட்ட தங்கும் விடுதிகளையும், அதன் உரிமையாளர்களையும், பொதுமக்களையும் சந்தித்து விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில், தனியார் தங்கும் விடுதிகள் குடியிருப்புக்கான உரிமத்தை பெற்று கட்டப்பட்டு பின்னர் வணிக ரீதியாக பயன்படுத்தி வருவதாகவும் எனவே அவற்றை இடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதன்படி தற்போது மசினகுடி ஊராட்சிக்கு உட்பட்ட 11 தனியார் தங்கும் விடுதிகள், பொக்காபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 20 தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் ஏற்கனவே சீல் வைக்கப்பட்டுள்ள 35 தனியார் தங்கும் விடுதிகளை அவற்றின் உரிமையாளர்கள் 15 நாட்களுக்குள் இடித்து அகற்ற வேண்டும் என நீலகிரி மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ஆக 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ