நிலத்தை சர்வே செய்ய ₹ 2 லட்சம் லஞ்சம் கேட்ட தாசில்தார் | ₹ 20,000 bribe | Female Tahsildar arrested
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாசில்தாராக பணியாற்றியவர் ராஜேஸ்வரி. இவரிடம் தோட்டமூலா பகுதியை சேர்ந்த உம்மு சல்மா என்பவர் நிலத்தை சர்வே செய்ய ஐகோர்ட் உத்தரவு பெற்றார். இப்பணிக்காக அவர் தாசில்தார் ராஜேஸ்வரியை அணுகினார். இதற்காக உம்மு சல்மாவிடம் இரண்டு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். தொடர்ந்து நடந்த பேச்சு வார்த்தையில் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக பெற தாசில்தார் சம்மதம் தெரிவித்தார். லஞ்சம் கொடுக்க விரும்பாத உம்மு சல்மா ஊட்டி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார் அறிவுரைப்படி வியாழன் இரவு உம்மு சல்மா தாசில்தாரிடம் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தார். அப்போது ஊட்டி லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் பரிமளாதேவி தலைமையிலான போலீசார் கையும் களவுமாக தாசில்தாரை கைது செய்தனர்.