உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / வானத்தில் வட்டமிட்ட ஹெலிகாப்டரால் பரபரப்பு | Coonoor | Helicopter

வானத்தில் வட்டமிட்ட ஹெலிகாப்டரால் பரபரப்பு | Coonoor | Helicopter

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஜோசப் கான்வென்ட் பள்ளி மைதானத்தில் இன்று காலை தனியார் ஹெலிகாப்டர் ஒன்று தரையிறங்கியது. இதில் கோவையை சேர்ந்த டி.வி.எஸ். கம்பெனி தொழிலதிபர்கள் வந்தனர். இவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பேண்ட் வாத்தியம் இசைக்க வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து உபதலை அருகே நடந்த தனியார் நிகழ்ச்சிக்கு சென்று மதியம் ஹெலிகாப்டரில் கோவை புறப்பட்டுச் சென்றனர். தேர்தல் நேரத்தில் ஹெலிகாப்டர் வானத்தில் வட்டமிட்டதாலும், பள்ளியில் தரையிறங்கியதாலும் குன்னுாரில் பரபரப்பு ஏற்பட்டது.

மார் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை