/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ பழுதான சாலையை சீரமைக்க வலியுறுத்தி மீன் பிடித்து நுாதன ஆர்ப்பாட்டம் | Bad road | pandalur
பழுதான சாலையை சீரமைக்க வலியுறுத்தி மீன் பிடித்து நுாதன ஆர்ப்பாட்டம் | Bad road | pandalur
ஊட்டி மற்றும் கூடலூர், கேரளா மாநிலம் நிலம்பூர், கர்நாடகா மாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேரளா மாநிலம் வயநாடு செல்வதற்கு பந்தலூர் வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலை பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் தாலுகா தலைநகரான பந்தலூர் பஜார் பகுதியில் சாலை முழுமையாக பழுதடைந்து குண்டும், குழிகளாக மாறி உள்ளது. மழைக்காலங்களில் குழிகளில் தண்ணீர் நிறைந்து வாகனங்கள் செல்லும் போது சிரமம் ஏற்படுவதுடன், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி விழுவதும் தொடர்கிறது.
அக் 20, 2024