/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ பாரம்பரிய நடனம் ஆடி மகிழ்ச்சி | Netkadir harvest festival | Cuddalore
பாரம்பரிய நடனம் ஆடி மகிழ்ச்சி | Netkadir harvest festival | Cuddalore
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் பணியர் இன பழங்குடி மக்கள் சார்பில் நெற்பயிர்களுக்கு நன்றி செலுத்தும் வகையிலும், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் நலமுடன் இருக்கவும், பேரிடர் மற்றும் வன விலங்குகளால் நெற் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க வேண்டி நெல் அறுவடைக்கு முன்பாக பாரம்பரியமான பூ புத்தரி எனப்படும் கதிர் அறுவடை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவை பழங்குடி மக்கள் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் பத்தாம் நாள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்தாண்டுக்கான திருவிழா இன்று நடந்தது.
அக் 26, 2024