உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்திலேயே பிரான்சிஸ் உயிர் பிரிந்தது | Santaclaus dancer dies suddenly |coonoor

கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்திலேயே பிரான்சிஸ் உயிர் பிரிந்தது | Santaclaus dancer dies suddenly |coonoor

நீலகிரி மாவட்டம் குன்னூர் பாய்ஸ் கம்பெனி மாதா தேவாலயத்தின் கேரல்ஸ் குழுவினர் பல்வேறு வீடுகளுக்கு சென்று கிறிஸ்மஸ் பண்டிகைக்காக பாடல்கள் பாடி, டான்ஸ் ஆடி பிரார்த்தனை நடத்தி வருகின்றனர். இதையொட்டி கடந்த 6ம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் இருந்து வருகை தந்த பிரான்சிஸ், வயது 58, என்பவர் இந்த குழுவினருடன் இணைந்து கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து வீடுகள் தோறும் சென்று டான்ஸ் ஆடி பிரார்த்தனை செய்து வந்தார். அப்போது ஒசட்டி பகுதியில் ஒரு வீட்டில் நடனமாடிய போது திடீரென மயங்கி கீழே விழுந்து ஸ்பாட்டிலேயே உயிரிழந்தார். இவரின் மகள்கள் வெளிநாட்டில் உள்ளனர்.

டிச 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ