உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / புல்லட் யானையை பிடிக்க கும்கி விஜய்க்கு சான்ஸ் | Kumki is Mastu for the Elephant | Pandalur

புல்லட் யானையை பிடிக்க கும்கி விஜய்க்கு சான்ஸ் | Kumki is Mastu for the Elephant | Pandalur

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்புகளை இடித்து அச்சுறுத்தி வரும் புல்லட் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. யானையை துரத்துவதற்காகவும், மயக்க ஊசி செலுத்திய பின்னர் அதனை, லாரியில் ஏற்றும் பணிக்காகவும் வரவழைக்கப்பட்ட கும்கி யானை பொம்மன் கடந்த சில நாட்களாக பணியில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் மஸ்து ஏற்பட்டதால், இந்த கும்கி யானையால் யானை பிடிக்கும் ஆபரேஷன் பணியில் ஈடுபடுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கும்கி விஜய் வரவழைக்கப்பட்டது.

டிச 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !