உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / பாரம்பரிய உடையணிந்து கோயிலில் சிறப்பு வழிபாடு | Tribals Festival | Ooty

பாரம்பரிய உடையணிந்து கோயிலில் சிறப்பு வழிபாடு | Tribals Festival | Ooty

நீலகிரி மாவட்டத்தில் தோடர், குரும்பர், இருளர், பனியர், காட்டு நாயக்கர், கோத்தர் என 6 வகையான பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இதில் தோடர் பழங்குடியின மக்கள் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், குந்தா உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அடர்ந்த வனப் பகுதிகளை ஒட்டியுள்ள மந்து எனப்படும் 70 கிராமங்களில் 15 குலங்களை சேர்ந்தவர்கள் தொன்று தொட்டு பாரம்பரியமாக வசித்து வருகின்றனர். தங்களுக்கென பாரம்பரிய உடை, தனி கலாச்சாரத்துடன் வசிப்பது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. உலகிலேயே நீலகிரி மலைத் தொடரில் மட்டும் இயற்கை வளங்களைக் கொண்ட மந்து எனப்படும் சிறு, சிறு குக்கிராமங்களில் அடர்ந்த வனப்பகுதியில் வசித்து வரும் இவர்களின் குலத்தொழில் விவசாயம் தான். இவர்கள் எருமைகளை குலதெய்வமாக வணங்கி வருகின்றனர். இம்மக்கள் புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஊட்டி அருகேயுள்ள தோடர் பழங்குடியின மக்களின் முத்தநாடு மந்து பகுதியில் அவர்களது பாரம்பரிய கோயில்களான கூம்பு வடிவு மற்றும் அரை வட்ட வடிவிலான ஓடையாள் வோ கோயில் முன்பு கூடி மொற் பர்த் எனப்படும் பாரம்பரிய விழாவை கொண்டாடினர்.

ஜன 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !