உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / படுகர் இன மக்களின் பாரம்பரிய கன்னி ஹெத்தை அம்மன் திருவிழா | Temple Festival | Coonoor

படுகர் இன மக்களின் பாரம்பரிய கன்னி ஹெத்தை அம்மன் திருவிழா | Temple Festival | Coonoor

நீலகிரி மாவட்டத்தில் படுக இன மக்கள் ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் ஹெத்தையம்மன் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். ஜெகதளா ஆறூர் மக்களால் கொண்டாப்படும் இவ்விழா சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. 48 நாட்கள் விரதம் மேற்கொண்ட ஹெத்தைக்காரர்கள், தாய் வீடான கொதுமுடி கோயிலுக்கு பாரம்பரிய உடை மற்றும் செங்கோலுடன் நடைபயணம் மேற்கொண்டு அருள்வாக்கு கூறினர். தொடர்ந்து காரக்கொரையில் பூ குண்டம் இறங்கினர். இன்று கன்னி ஹெத்தையம்மன் கோயில் உள்ள ஜெகதளாவில் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோயிலில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பாரம்பரிய சேலை அம்மனுக்கு சார்த்தப்பட்டது.

ஜன 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை