உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / மழை நின்றதால் மீண்டும் ஊட்டி ரயில் சேவை துவங்கியது | Orty train service started

மழை நின்றதால் மீண்டும் ஊட்டி ரயில் சேவை துவங்கியது | Orty train service started

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் - ஊட்டி இடையே மலை ரயில் தினசரி காலை 7:10 மணிக்கு இயக்கப்படுகிறது. இந்த மலை ரயிலில் பயணம் செய்ய ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே ரயில் பாதை பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி ரயில்வே நிர்வாகம் கடந்த 16 மற்றும் 17ம் தேதி மலை ரயிலை ரத்து செய்திருந்தது. தற்போது மழை நின்றதை தொடர்ந்து இன்று முதல் மீண்டும் மலை ரயில் சேவை மீண்டும் துவங்கியது. காலை 7:10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து, ஊட்டிக்கு மலை ரயில் புறப்பட்டு சென்றது. இதில் 150 சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.

அக் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி