மைசூரில் இருந்து தாளூருக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய பிரியங்கா | Priyanka from the Nilgiris
கேரள மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா போட்டியிடுகிறார். பிரச்சாரம் செய்வதற்காக அவர் டில்லியில் இருந்து இன்று விமானம் மூலம் மைசூர் வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் தமிழகத்தின் எல்லைப்பகுதியான நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தாளூரில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் இறங்கினார். அவருக்கு தமிழக - கேரளா மாநில கட்சி நிர்வாகிகள் தடபுடல் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து கல்லூரி மாணவர்களை சந்தித்த பிரியங்கா அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். சாலை மார்க்கமாக வயநாடு மீனங்காடி சென்று, அங்கு நடக்கும் ரோடு ஷோவில் பங்கேற்கிறார். தொடர்ந்து பனமரம்,பொழுதனா பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். திருவம்பாடி, மம்பாடு, நிலம்பூர் பகுதிகளில் நாளை நடக்கும் பிரச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பிரியங்கா வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.