உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / சாய்பாபா கோயிலில் மனமுருகிய துர்கா | Saibaba temple | Durga worship | coonoor

சாய்பாபா கோயிலில் மனமுருகிய துர்கா | Saibaba temple | Durga worship | coonoor

சாய்பாபா கோயிலில் மனமுருகிய துர்கா / Saibaba temple / Durga worship / coonoor நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் வருகை தந்தார். அவர் ஊட்டி அரசு விருந்தினர் மாளிகையில் மனைவி துர்காவுடன் தங்கியுள்ளார். இன்று காலை 10:50 மணிக்கு குன்னூர் எடப்பள்ளி சாய்பாபா தர்ம ஸ்தலா கோயிலுக்கு துர்கா வருகை தந்தார். அங்குள்ள சிவலிங்கத்திற்கு பாலபிஷேகம் செய்து மலர் தூவி வழிபட்டார். துர்காவிற்கு சாய்பாபா தர்மஸ்தலா சுவாமினி சக்திமா, சிறிய சாய் சிலைகளை வழங்கினார். இவருடன் நடிகை சரண்யா உட்பட குடும்பத்தினர் பங்கேற்று வழிபட்டனர். சாய்பாபா முன் மண்டியிட்டு துர்கா வழிபட்டார். ஏற்பாடுகளை தி.மு.க., நிர்வாகிகள் காளிதாஸ், செல்வம், யசோதா உட்பட பலர் செய்திருந்தனர்.

மே 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை