உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / வேத மந்திரம் முழங்க கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது

வேத மந்திரம் முழங்க கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது

வேத மந்திரம் முழங்க கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது/ Shakti Maha muneshwara Temple consecration/ coonoor குன்னூர் ரயில்வே காலனி சக்தி மகா முனீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. கோயிலில் விநாயகர், காட்டேரி அம்மன், கருமாரியம்மன், துர்க்கை மற்றும் காளியம்மன் சிலைகள் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டன. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு வாஸ்து பூஜை, நாடி சந்தான ஆவர்த்தனம், பிராணப்ரதிஷ்டை நடைபெற்றது. நேற்று காலை கணபதி ஹோமம் மற்றும் மூல மந்திர பாராயணம் நடைபெற்றது. யாகசாலை பூஜை மகா பூர்ணாகுதியுடன் நிறைவடைந்தது. யாகசாலையில் இருந்து மேள தாளம் முழங்க கடம் புறப்பாடானது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கோபுர கலசத்திற்கு புனித நீர் உற்றினர். சக்தி மகா முனீஸ்வரர் மற்றும் பரிவார சன்னதிகளில் மகா அபிஷேகம், அலங்கார தீபாரதனை நடைபெற்றது. கோயில் புனரமைப்பு பணியில் கிடைத்த சுயம்பு அம்மன் கல்லை காளி சன்னதியில் வைத்து சிறப்பு பூஜை நடத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. சர்வ சாதகம் மகேஷ் சிவாச்சாரியார் குழுவினர் மற்றும் கும்பாபிஷேக விழா கமிட்டியினர் ஏற்பாடுகளை செய்தனர். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மார் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை