உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | sri arulmurugan temple kumbabhishekam | cuddalore

திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | sri arulmurugan temple kumbabhishekam | cuddalore

திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் / sri arulmurugan temple kumbabhishekam / cuddalore நீலகிரி மாவட்டம் கூடலூர் நந்தட்டி ஸ்ரீ அருள் முருகன் கோயில் கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் துவங்கியது. விழாவையொட்டி இன்று காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, தீபாராதனை, முளைப்பாரி ஊர்வலம் நடந்தன. தொடர்ந்து யாக சாலையில் இருந்து கும்பாபிஷேக கலச நீர் ஊர்வலமாக கோயிலை சுற்றி எடுத்து வரப்பட்டது. காலை 9:20 மணிக்கு கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. முருகப் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் முருகப் பெருமானை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் கமிட்டி மற்றும் ஊர் மக்கள் செய்தனர்.

மார் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை