பக்தர்கள் மீது புனித நீர் தெளிப்பு | sri subramaniya swami temple kumbabhishekam | ooty
ஊட்டியில் உள்ள ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி கோயிலில் திருப்பணிகள் நிறைவு பெற்று கும்பாபிேஷ விழா கடந்த 29 ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. இன்று காலை 5.30 மணிக்கு மங்கள இசையுடன், கணபதி பூஜையை தொடர்ந்து காலை 7.15 மணிக்கு மகாகும்பாபிேஷகம் கோலகலமாக நடைபெற்றது அதைத் தொடர்ந்து ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் மகா அபிசேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கபட்டது. ஏற்பாடுகளை மாரியம்மன் கோயில் தலைமை அர்ச்சகர் சிவாச்சாரியார் சரவணன் குருக்கள் தலைமையில் அர்ச்சகர்கள் லஷ்மிநாராயணன் ஸ்ரீதர், விஜய் ஆனந்த் மற்றும் முரளிதரன் ஆகியோர் செய்தனர். மாலையில் வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருகல்யாண வைபவம் மற்றும் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.