பாதி உடல் மட்டும் வனத்தில் கிடந்ததால் போலீசார் விசாரணை | Nilgiris | Tiger Attack Youth
பாதி உடல் மட்டும் வனத்தில் கிடந்ததால் போலீசார் விசாரணை / Nilgiris / Tiger Attack Youth / Police Investigation நீலகிரி மாவட்டம் கல்லக்கொரை மந்து பகுதியை சேர்ந்தவர் கேந்தர் குட்டன் வயது 42. தோடர் இனத்தை சேர்ந்த இவர் நேற்று மாலை விறகு சேகரிக்க காட்டுக்குள் சென்றார். இரவு வீடு திரும்பாததால் உறவினர்கள் காட்டுக்குள் தேடினர். கேந்தர் குட்டனை புலி தாக்கி பாதி உடலை சாப்பிட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அதைக் கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஸ்பாட்டிற்கு விரைந்த வனத்துறையினர் கேந்தர் குட்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஹாஸ்பிடல் அனுப்பி வைத்தனர். மாவட்ட வன கள இயக்குநர் தலைமையில் வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர். தோடர் இன தொழிலாளி புலி தாக்கி தின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.