முப்படை அதிகாரிகள் வியூகங்கள் வகுத்து செயல்பட வேண்டும்: ராஜ்நாத்சிங்
முப்படை அதிகாரிகள் வியூகங்கள் வகுத்து செயல்பட வேண்டும்: ராஜ்நாத்சிங் / Wellington Army Training College / Graduation ceremony / Coonoor நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ கல்லுாரியில் 80வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று 26 நட்பு நாடுகளை சேர்ந்தவர் உட்பட 479 அதிகாரிகளுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்பித்தார். முன்னதாக வெலிங்டன் போர் நினைவு சதுக்கத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். முப்படைகளின் 2வது தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அனில் சவுகான் உடனிருந்தார். விழா முடிந்து டில்லி செல்ல ஹெலிகாப்டர் மூலம் கோவை ஏர்போர்ட் புறப்பட்டு சென்றார்.
ஏப் 10, 2025