உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / வழக்கத்தை விட 40 மடங்கு விற்பனை அதிகரிப்பு | Summer heat peak Beer sales top

வழக்கத்தை விட 40 மடங்கு விற்பனை அதிகரிப்பு | Summer heat peak Beer sales top

புதுச்சேரியில் கிடைக்கும் மது வகைகளுக்கு இந்தியாவில் அதிக மவுசு அதிகம். இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு பீர் மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் பீர் வகைகள் புதுச்சேரிக்கு இறக்குமதி செய்யப்பட்டு சுமார் 40 மேற்பட்ட பீர்கள் வகைகள் புதுச்சேரியில் விற்பனை செய்யப்படுகிறது. புதுச்சேரி ஒட்டியுள்ள தமிழகம், அண்டை மாநிலங்களான தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, ஹரியானா, குஜராத் என பல மாநிலங்களில் இருந்தும் புதுச்சேரிக்குச் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகின்றனர். இதனால் இங்கு வழக்கமாக 2 லட்சம் கேஸ் பீர்கள் இங்கு விற்பனையானது. தற்போது 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட கேஸ் பீர் விற்பனையாகிறது. அதிக வெயிலின் காரணமாக வழக்கத்தை விட 40 சதவீத விற்பனை அதிகரித்துள்ளது... கோடை காலம் வந்து விட்டால் மது பிரியர்கள் பீருக்கு மாறி மாறுவதால் பீருக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்களை திருப்தி படுத்திட பெங்களூரு,மகாராஷ்டிரா,கோவா,காஷ்மீர்,கர்நாடகா,பஞ்சாப் போன்ற பகுதிகளில் உற்பத்தியாகும் பீர்கள் புதுச்சேரிக்கு வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

ஏப் 26, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை