குழந்தைகளுடன் பெற்றோர் ஆர்வத்துடன் பங்கேற்பு
‛தினமலர் அரிச்சுவடி கோலாகலம் குழந்தைகளின் கல்விக் கண் திறப்பு டைட்டில்: குழந்தைகளுடன் பெற்றோர் ஆர்வத்துடன் பங்கேற்பு / childrens begin step of education / Dinamalar / Puducherry விஜயதசமியன்று கல்வி, கலைகள் என எதை துவங்கினாலும் வெற்றியுடன் முடியும் என்பது ஐதீகம். இந்நாளில் பெற்றோர், தங்கள் குழந்தைகளை பள்ளிகளில் சேர்ப்பதும் வழக்கம். ஆண்டு தோறும் தினமலர் மாணவர் பதிப்பு பட்டம் சார்பில் வித்யாரம்பத்துக்கு உகந்த நாளான விஜயதசமி திருநாளில் இளந்தளிர்களின் பிஞ்சு விரல் பிடித்து அரிச்சுவடியை ஆரம்பிக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் கோர்க்காடு தி ஸ்காலர் சி.பி.எஸ்.இ. பள்ளி மற்றும் லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி என இரு இடங்களில் கோலாகலமாக நடந்தது. வித்யாரம்பம் நிகழ்ச்சிக்கு தினமலர் நாளிதழ் புதுச்சேரி பதிப்பு வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., ஜிப்மர் இயக்குநர் வீர் சிங் நேகி, தி ஸ்காலர் பள்ளி சேர்மன் பழனிவேல், தாளாளர் சுரேஷ், நிர்வாக இயக்குநர் சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியை சிறப்பு விருந்தினர்கள், செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் வைத்தியநாதன், வெங்கடேசன், கலெக்டர் குலோத்துங்கன், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ரன், சுகாதாரத் துறை இயக்குநர் செவ்வேள் ஆகியோர் துவக்கி வைத்து பங்கேற்றனர். மொபைல் மூலம் முன் பதிவு செய்திருந்த பெற்றோர் தங்களது குட்டி குழந்தைகளுடன் காலை 7 மணி முதலே நிகழ்ச்சிக்கு அலை அலையாக வர துவங்கினர். வாசலிலேயே, குழந்தைகளுக்கு ருசி நிறுவனத்தின் பலுான்கள் கொடுத்து வரவேற்க, அவர்களின் உற்சாகத்திற்கும், கொண்டாட்டத்திற்கும் அளவே இல்லை எனலாம். கணபதி பூஜை, சரஸ்வதி பூஜையுடன் அமர்களமாக வித்யாரம்பம் நிகழ்ச்சி துவங்கியது. குழந்தைகளின் ஆட்காட்டி விரல் பிடித்து அரிசியில் ஓம் என்ற பிரணவத்தை பெற்றோர் எழுதி கல்விக் கண்ணை திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற 2.5 வயது முதல் 3.5 வயதுள்ள மழலைகளுக்கு கல்வியை கற்றுக்கொடுக்க புத்தகப்பை, சுட சுட உணவை கொண்டு செல்ல ஹாட் பாக்ஸ், திண்பண்டங்களை எடுத்து செல்ல ஸ்நாக்ஸ் பாக்ஸ், ஓடி விளையாட வண்ணமயமான 12 பந்துகள் அடங்கிய கிப்ஃட் கிட் வழங்கப்பட்டது. விழுப்புரம்: வித்யாரம்பம் கல்விச்சேவை போலீஸ் SP துவக்கி வைப்பு தினமலர் மாணவர் பட்டம் பதிப்பு மற்றும் விழுப்புரம் சரஸ்வதி சென்ட்ரல் சி.பி.எஸ்.சி. பள்ளி இணைந்து நடத்திய வித்யாரம்பம் நிகழ்ச்சியை விழுப்புரம் போலீஸ் எஸ்பி சரவணன் துவக்கி வைத்தார். மாவட்ட கல்வி அலுவலர் சிவசுப்பிரமணியம். முதுநிலை வருமான வரி ஆலோசகர் குலோத்துங்கன். குழந்தைகள் நல அலுவலர் பிரேமலதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் குழந்தைகளுடன் கலந்து கொண்ட பெற்றோர்களிடம் இந்த அழகிய தருணத்தை புகைப்படத்துடன் அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. கள்ளக்குறிச்சி: தினமலர் மாணவர் பதிப்பு பட்டம் மற்றும் கள்ளக்குறிச்சி ஏகேடி பள்ளி சார்பில் வித்யாரம்பம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி சென்னை சாலையில் இயங்கி வரும் ஏகேடி சிபிஎஸ்சி பள்ளியில் நடைபெற்றது. தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் விஷ்ணு மூர்த்தி அரசு வழக்கறிஞர் தேவசந்திரன், ஏகேடி பள்ளிகளின் நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன், தாசில்தார் அனந்த சயனன், ஆடிட்டர்கள் கோகுல்நாத், மணிவேல், டாக்டர்கள் பாபு சக்ரவர்தி, இந்து பாலா, உஷா நந்தினி, விஷ்வணாநாதன், லஷ்மி பிரியா, வேளாண் இணை இயக்குனர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் குழந்தைகளுடன் கலந்து கொண்ட பெற்றோர்களிடம் இந்த அழகிய தருணத்தை புகைப்படத்துடன் அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனால் பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். விருத்தாசலம்: ‛அ‛னா ‛ஆவன்னா அரிச்சுவடி ஆரம்பம் மழலைச் செல்வங்களுக்கான வித்யாரம்பம் அனா ஆவன்னா அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி தினமலர் மாணவர் பதிப்பு பட்டம் மற்றும் விருத்தாசலம் சரஸ்வதி வித்யாலயா கல்விக் குழுமம் சார்பில் விருத்தாசலம் ஆழிச்சிகுடி சாலையில் உள்ள சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் வெகு விமர்சையாக துவங்கியது. பள்ளியின் நிறுவனத் தலைவர் சுரேஷ தலைமை வகித்தார்.சரஸ்வதி வித்யாலயா பள்ளியின் தாளாளர் இந்துமதி சுரேஷ், பொருளாளர் அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக விருத்தாசலம் டிஎஸ்பி பாலகிருஷ்ணன், அரசு ஹாஸ்பிடல் தலைமை டாக்டர் சாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மழலைச் செல்வங்களின் விரல்களை பிடித்து பூஜை செய்து வைக்கப்பட்டிருந்த நெல்மணிகளில் ஓம் மற்றும் அனா எழுதி மழலைச் செல்வங்களோடு பெற்றோர் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெற்றோர்களுக்கு மழலை செல்வங்களுடன் புகைப்படத்துடன் கூடிய சான்றிதழ் வழங்கப்பட்டது.