நினைவாற்றல் அகாடமி துவக்க முடிவு |international memory skills competion|pondy student
நினைவாற்றல் அகாடமி துவக்க முடிவு /international memory skills competion/pondy student புதுச்சேரி மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் நான்காம் ஆண்டு மாணவர் விஷ்வா ராஜ்குமார். நினைவாற்றல் திறன்மிக்கவர். இவர் மாநில, தேசிய மற்றும் சர்வதேச நினைவாற்றல் போட்டிகளில் பலமுறை வெற்றி பெற்றுள்ளார். சர்வதேச மெமரி லீக் சாம்பியன்ஷிப் 2025 போட்டி நியூயார்க்கில் இம்மாதம் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். ஆன்லைனில் நடைபெற்ற அனைத்துப் போட்டியிலும் விஷ்வா முதலிடம் பெற்று சர்வதேச அளவில் சாம்பியன் பட்டம் வென்றார். அவரை கல்லூரி முதல்வர் மலர் கண்ணன் பாராட்டி கௌரவித்தார். மாணவர்களுக்கு நினைவாற்றல் பயிற்சி அளிக்க அகடமி துவங்கி இருப்பதாக விஷ்வா தெரிவித்தார்.