நீட் சாதனை மாணவர் ரமணீஷ்வர் அட்வைஸ் | NEET Achievement | Student
நீட் சாதனை மாணவர் ரமணீஷ்வர் அட்வைஸ் | NEET Achievement | Student Ramaneeshwar NEET Achievement | Puducherry புதுச்சேரி ஆதித்யா வித்யாஷ்ரம் பள்ளி மாணவர் ரமணீஷ்வர் நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 646 மதிப்பெண் எடுத்து தேசிய அளவில் 1756ஆவது இடம் பெற்று சாதனை படைத்தார். 2026ஆம் கல்வி ஆண்டிற்கான நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டது. இதில் நாடு முழுவதும் சுமார் 11.21 லட்சம் மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். புதுச்சேரியில் நீட் தேர்வில் மொத்தம் 4,716 பேர் எழுதியதில் 2,451பேர் தேர்ச்சியடைந்தனர். இத்தேர்வில் ஆதித்யா பள்ளி மாணவர் ரமணீஷ்வர் 720 மதிப்பெண்களுக்கு 646 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் 1756ஆவது இடம் பெற்று சாதனை படைத்தார். அப்பள்ளி மாணவி இன்பஸ்ரீ 633, பிரணவ் 631, பிரீதம் 630, ரூபாவதி 616, விஷ்வக் ஷேனன் 602 மற்றும் கைலாஷ் விஷ்வநாதன் 600 ஆகியோர் 600க்கு மேல் மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தனர். 550 முதல் 599 வரை 15 பேர், 500 முதல் 545 வரை 10 பேர், 475 முதல் 499 வரை 10 பேர், 450 முதல் 474 வரை 16 பேர் கூடுதல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளனர். சாதனை மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி நிறுவனர் ஆனந்தன், தாளாளர் அசோக் ஆனந்த், ஸ்ரீவித்ய நாராயணா அறக்கட்டளை டிரஸ்டி அனுதாபூனமல்லி ஆகியோர் தலைமையில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.