/ மாவட்ட செய்திகள்
/ புதுச்சேரி
/ புதுச்சேரியில் முதல்வர் வீட்டிற்கு படையெடுத்த அதிகாரிகள் | pondy officers invade CM house
புதுச்சேரியில் முதல்வர் வீட்டிற்கு படையெடுத்த அதிகாரிகள் | pondy officers invade CM house
புதுச்சேரியில் வேலை வாய்ப்பு, இட ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு சார்பு செயலர் ஜெய்சங்கர் வீட்டு முன் சமூக அமைப்பினர் கடந்த 16 ம் தேதி ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஒரு முடிவு காணும் பொருட்டு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இதன்படி தங்களுக்கும், தங்களின் குடும்பத்துக்கும் பாதுகாப்பு வழங்கும்படி முதல்வர் ரங்கசாமியிடம் கேட்பது என முடிவு செய்தனர். இதையடுத்து முதல்வரின் வீட்டிற்கு அதிகாரிகள் படையெடுத்தனர். முதல்வரை சந்தித்து பாதுகாப்பு வழங்கும்படி கோரிக்கை விடுத்தனர். அதிகாரிகளின் கோரிக்கைகளை கேட்ட முதல்வர் ரங்கசாமி உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதி அளித்தார்.
ஆக 21, 2024