உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரியில் களைகட்டும் பிபிஎல்; மாஹே முதல் வெற்றி

புதுச்சேரியில் களைகட்டும் பிபிஎல்; மாஹே முதல் வெற்றி

புதுச்சேரியில் களைகட்டும் பிபிஎல்; மாஹே முதல் வெற்றி Pondicherry Premier League |PPL 2026 |Villianur Mohit Kings |Ruby White Town Legends புதுச்சேரி பிரீமியர் லீக்கின் 3வது சீசன் கடந்த 7ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டிகள் துத்திப்பட்டு சீகம் மைதானத்தில் நடக்கிறது. இன்று நடக்கும் 4வது லீக் போட்டியில் ரூபி ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அணியும், வில்லியனூர் மோஹித் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அணி முதலில் பவுளிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த வில்லியனூர் அணி கேப்டன் அமன் கான் அதிரடியாக விளையாடி 32 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உட்பட 60 ரன்கள் குவித்தார். இந்த அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் சேர்த்தது. 199 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய ஒயிட் டவுன் லெஜண்ட்ஸ் அணி, 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 175 ரன்கள் மட்டுமே எடுத்தது. வில்லியனூர் மோஹித் கிங்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சீசனில் வில்லியனூர் அணி தொடர்ச்சியாக 2வது வெற்றியை பதிவு செய்த நிலையில், 60 ரன்கள் விளாசிய அமன் கான் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். தொடர்ந்து நடைபெற்ற 5வது லீக் போட்டியில் ஜெனித் ஏனம் ராயல்ஸ் அணியும், மாஹே ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற மாஹே அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த ஏனம் ராயல்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. பின்னர் 185 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மாஹே ஸ்ட்ரைக்கர்ஸ் அணி, 19 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மாஹே ஸ்ட்ரைக்கர்ஸ் அணி இந்த சீசனில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

ஜூலை 10, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை