உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / போலீசாரை கண்டித்து டிஜிபி ஆபீஸ் முற்றுகையிட முடிவு | Puducherry | Puducherry DGP office siege

போலீசாரை கண்டித்து டிஜிபி ஆபீஸ் முற்றுகையிட முடிவு | Puducherry | Puducherry DGP office siege

போலீசாரை கண்டித்து டிஜிபி ஆபீஸ் முற்றுகையிட முடிவு / Puducherry / Puducherry DGP office siege புதுச்சேரி அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் அமுதரசன். இவர் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கத்தின் மாநில தலைவர். இவரது ஆதரவாளர்கள் சிலரை குற்ற வழக்குகளில் விசாரணை நடத்த அரியாங்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்றனர். போலீஸ் ஸ்டேஷன் சென்ற அமுதரசன் தனது ஆதரவாளர்களை விடுவிக்கும்படி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கொதிப்படைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மற்றும் போலீசார் அமுதரசனின் கன்னங்கள் வீங்கும் அளவிற்கு பளார் விட்டு ஸ்டேஷனை விட்டு வெளியேற்றினர். போலீசார் தாக்கியதில் காயமடைந்த அமுதரசன் புதுச்சேரி அரசு ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டார். இதைக் கண்டித்து இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கக்கோரி அரியாங்குப்பம் போலீஸ் ஸ்டேஷனை முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன் தலைமையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை கைது செய்தனர்.

ஏப் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை