உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / புதுச்சேரி / வெற்றி பெற்ற அணிகள் பரிசுகளை அள்ளியது

வெற்றி பெற்ற அணிகள் பரிசுகளை அள்ளியது

வெற்றி பெற்ற அணிகள் பரிசுகளை அள்ளியது /state level kho kho competition/orient club, thillaiyadi valliyammai won / pondy புதுச்சேரி திருக்காஞ்சியில் மாநில அளவிலான 41வது சீனியர் கோகோ போட்டி நடைபெற்றது. போட்டியை புதுச்சேரி வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் துவக்கி வைத்தார். இதில் ஆடவர் பிரிவில் 10 அணிகளும் மகளிர் பிரிவில் 9 அணிகளும் பங்கேற்றன. ஆண்கள் பிரிவில் ஓரியன்ட் விளையாட்டுக் கழகம் முதலிடம், மண்வாசனை இளைஞர் நற்பணி மன்றம் இரண்டாமிடம், தனசேகரன் விளையாட்டுக் கழகம் மூன்றாமிடம் பெற்றது. பெண்கள் பிரிவில் தில்லையாடி வள்ளியம்மை அணி முதலிடம், புதிய பாரதம் அணி இரண்டாமிடம் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர் தேனீஜெயக்குமார் பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கி கௌரவித்தார்

ஜூன் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !