இன்று முதல் இயங்கத் துவங்கியது | Temporary bus stand functioning | Puducherry
புதுச்சேரி பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 138 கோடி செலவில் புதுப்பிக்கப்படுகிறது. இதற்கான கட்டுமான பணிகள் விரைவில் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி புதுச்சேரி பஸ் நிலையம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. பழைய பஸ் நிலையப் பணி முடியும் வரை கடலூர்_ புதுச்சேரி சாலையில் உள்ள ஏஎம்டி மைதானத்தில் தற்காலிக பஸ் நிலையம் இயங்கும் என நகராட்சி அறிவித்துள்ளது. அதன்படி இன்று காலை 6 மணி முதல் தற்காலிக பேருந்து நிலையம் ஏஎம்டி மைதானத்தில் செயல்படத் துவாங்கியது. தற்காலிக பஸ் நிலையத்தில் ஆட்டோ டெம்போக்கள் நிறுத்த தனியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு குடிநீர் வசதியும் கழிவறை வசதியும் செய்யப்பட்டுள்ளன. பஸ் நிலையத்தை அதிகாரிகள் பார்வையிட்டனர். கடைகள் வைப்பதற்கான இடம் ஓரிரு நாளில் ஒதுக்கப்படும் என நகராட்சி ஆணையர் கந்தசாமி தெரிவித்தார்.