கைத்துப்பாக்கியுடன் வந்தவரிடம் சீனியர் எஸ்பி கலைவாணன் கிடுக்கிப்பிடி
கைத்துப்பாக்கியுடன் வந்தவரிடம் சீனியர் எஸ்பி கலைவாணன் கிடுக்கிப்பிடி | Puducherry | A person who came to Vijays meeting | Senior SP Kalaivanans investigation புதுச்சேரி துறைமுக மைதானத்தில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது. கூட்டம் நடைபெறவுள்ள இடத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு QR பாஸ் உள்ளவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். இன்று காலை பிரதான நுழைவு வாயிலை கடந்து வெள்ளை சட்டை அணிந்த நபர் உள்ளே சென்றார். கூட்டம் நடைபெறவுள்ள இடத்தில் போலீசார் உள்ளே வரும் அனைவரையும் மீண்டும் சோதனையிட்டனர். அந்த நபர் இடுப்பில் கைத்துப்பாக்கி வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை போலீசார் சுற்றி வளைத்து கூட்டம் நடைபெறும் இடத்தில் இருந்து வெளியே அழைத்து வந்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது சிவகங்கை மாவட்ட தவெக முக்கிய நிர்வாகி பிரபுவின் பாதுகாப்பு அதிகாரியென்றும், தனது பெயர் டேவிட் என தெரிவித்தார். அவரை ஒதியஞ்சாலை போலீஸ் ஸ்டெஷனில் கைத்துப்பாக்கிக்கான லைசென்ஸ் உள்ளிட்டவை குறித்தும், பொதுக்கூட்டத்துக்கு ஏன் துப்பாக்கி எடுத்து வந்தீர்கள் என்பது குறித்தும் சீனியர் எஸ்பி கலைவாணன் விசாரணை நடத்தினார். விஜய் கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் கூட்ட அரங்கம் பரபரப்பானது.