youtubeல் வாழ்த்திய உறவினர்கள்
புதுச்சேரி முத்தியால்பேட் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்ராம். பி பட்டதாரியான இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் பணியாற்றி வந்தார். அங்கு பி.பார்ம் படித்த சிலேசி பெத் சிம்பாளன் என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்திய முறைப்படி திருமணம் செய்து கொள்ள மணப்பெண் விரும்பினார். இதனை அடுத்து மணமக்கள் இருவரும் புதுச்சேரியில் உள்ள மாரியம்மன் கோவிலில் தமிழ் முறைப்படி இன்று திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தை youtube மூலம் பார்த்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த உறவினர்கள் மணமக்களை வாழ்த்தினர்.
ஜூன் 10, 2024