கண்டுகொள்ளுமா தமிழக அரசு? | DMK Fails | TNSTC bus worst condition
கரப்பான், மூட்டைப் பூச்சி ஃப்ரீ டெலிவரி திராவிட மாடல் பஸ் ஸ்பெஷல் ஆஃபர் திராவிட மாடல் ஸ்பெஷல் பஸ்னு சொன்னதும் ஏசி, நல்ல seatனு comfortable a இருக்கும்னு நினைச்சுடாதீங்க. தறி கேட்டு ஓடுறது, திடீர்னு சீட்டு கழண்டு விழுறது, பஸ் கூர பிச்சுட்டு போற டப்பா பஸ் தான் ஸ்பெஷல். அதுலயும் நடுரோட்டுல பஞ்சரான பஸ்ஸ, ஓரம் போ, ஓரம் போ, திராவிட மாடல் பஸ்சு வருதுனு மக்கள் தினமும் நிறைய இடத்துல தள்ளிட்டு போறாங்க. இது என்ன பிரமாதம்? இதைவிட ஸ்பெஷல் ஐட்டம் ஒன்னு இருக்குன்னு நினைக்கிற அளவுக்கு தர்மபுரில ஒரு சம்பவம் நடந்திருக்கு. நேத்து ராத்திரி பொன்னகரம் டு ஓசூருக்கு திராவிட மாடல் பஸ் கிளம்பிருக்கு. பஸ்ல திரும்புற பக்கம் எல்லாம் நூத்தாக்கணக்கான கரப்பான் பூச்சியும் மூட்டை பூச்சியும் ஜாலியா சுத்திட்டுருந்துச்சு. ஷாக் ஆன பேசஞ்சர்ஸ் கண்டக்டர் கிட்ட சொல்லிருக்காங்க. ஆனா எந்த பிரயோஜனமும் இல்லை. நைட் டைம் வேற பஸ் இல்லாததால திராவிட மாடல் கரப்பான் பூச்சி ஸ்பெஷல் பஸ்ல மக்கள் டிராவல் பண்ணினாங்க. சிலரு உட்கார பிடிக்காம, ஃபுல்லா நின்னுட்டு போனாங்க. சின்ன குழந்தைங்க பயந்து தூங்காம சிரமப்பட்ருக்காங்க. பொன்னாகரத்துல இருக்குற நிறைய பஸ் நிலைம இதுதான். பலமுறை கம்ப்ளைன்ட் கொடுத்தும் எந்த பயனும் இல்லைனு மக்கள் முகம் சுளிக்கிறாங்க. முறையான பராமரிப்பு மற்றும் சுகாதாரமில்லாத திராவிட மாடல் அரசு பஸ்ல போனா , உடல் உபாதைகள் வீட்டுக்கு அழையா விருந்தாளி. முறையா பஸ் சுத்தம் பண்ணி பூச்சி மருந்து தெளிச்சு maintain பண்ணனும்னு மக்கள் கோரிக்கை வச்சிருக்காங்க